நான் கர்ப்பமாக இல்லை, நடிகை சொன்ன கஸ்தூரி தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை எனலாம். சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் என ட்வீட் செய்து #mrPREGNANT ” என்றும் குறிப்பிட்டு இருந்தார். கஸ்தூரிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வது குழந்தையா என அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
ஆனாலும் சில ரசிகர்கள் கஸ்தூரி நிச்சயம் கர்ப்பமாக இருக்கமாட்டார். எதாவது படம் அல்லது சீரியலுக்கான கெட்டப்பாகத்தான் இருக்கும் என்று கூறிவந்தனர். இருந்தாலும் நடிகை குறித்து எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஒருவேளை உண்மையிலேயே அவர் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் போல என்று இணையத்தில் பேசப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ரசிகர்கள் ஊகித்தது சரிதான் என்று கஸ்தூரியின் அடுத்த பதிவில் இருந்து தெரியவந்துள்ளது. நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ‘மிஸ்டர் பிரக்னண்ட்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அந்த படத்தின் கெட்டப் தான் இந்த கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் என்றும் மற்றும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தின புகைப்படமாக அதை பயன்படுத்திக் கொண்டதாகவும் உண்மையில் நான் கர்ப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் பிரக்னண்ட் என்ற திரைப்படத்தில் சையத் ஷோகேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலு சுகாசினி மணிரத்னம், கஸ்தூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும் இப்படிக்கூடவா பதிவை போடுவாங்க என்றும் கேட்டு வருகின்றனர்.