Home / FINANCE / எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இனியும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!

எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இனியும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா? இனியும் விலை அதிகரிக்குமா?

 

சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. டெக்னிக்கலாக பார்க்கும்போது இன்னும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நிபுணர்களும் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1970 டாலர்களை உடைக்கலாம் என்று கூறியுள்ளனர்.

 

தங்கத்தின் முக்கிய லெவல் ஆக 1950 மற்றும் 1970 டாலர்களாக உள்ளது. இதே சப்போர்ட் லெவல் 1930 டாலர்களாகவும் கணித்துள்ளனர். எனினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் 2000 டாலர்களை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். சந்தையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், சந்தை எப்போது வேண்டுமென்றாலும் சரிவினைக் காணலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. ஆக அப்படி சரியும் பட்சத்தில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைய இது காரணமாக அமையலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன. இவற்றோடு சர்வதேச பங்கு சந்தைகளும் இன்று சரிவில் காணப்படும் நிலையில், அதுவும் தங்கத்திற்கு முதலீடுகளை மாற்ற வழிவகுத்துள்ளது.

About admin